Monday, September 21, 2015

காய்கறி நாற்று உற்பத்தி: நாளை இலவசப் பயிற்சி


குழித்தட்டு முறையில் தக்காளி, மிளகாய், கத்தரி நாற்றுகள் உற்பத்தி மற்றும் சாகுபடித் தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் திங்கள்கிழமை (செப்.21) காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.

 திட்ட ஒருங்கிணைப்பாளர் பி.மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இப்பயிற்சி முகாமில் கத்தரி, தக்காளி மற்றும் மிளகாயில் உள்ள வீரிய ஒட்டு ரகங்கள், குழித்தட்டு முறையில் நாற்று உற்பத்தி, இரட்டை வரிசை நடவு முறை, பயிர் இடைவெளி, சொட்டு நீர்ப்பாசனம் அளிக்கும் முறைகள், நீர்வழி உரமிடல், களை நிர்வாகம், மண்ணின் ஈரப்பதத்தைப் பாதுகாக்கும் தொழில் நுட்பங்கள், ஊட்டச்சத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் முறைகள் மற்றும் பூச்சி நோய் நிர்வாக முறைகள் உள்ளிட்ட அனைத்துத் தொழில்நுட்பங்களும் விரிவாகக் கற்றுத் தரப்படும்.
 முகாமில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.
 விருப்பமுள்ளவர்கள் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்துக்கு நேரில் வந்தோ அல்லது 04286-266345 என்ற தொலைபேசி எண்ணிலோ பெயரை முன் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

http://www.dinamani.com/edition_dharmapuri/namakkal/2015/09/20/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3/article3037627.ece

No comments:

Post a Comment