அவலூர்பேட்டை:நெல் இயந்திர நடவு சாகுபடியில் எக்டேருக்கு மூன்றாயிரம் ரூபாய் மானியம் பெற விவசாயிகளுக்கு, வேளாண் உதவி இயக்குனர் பெரியசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து வேளாண் உதவி இயக்குனர் பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:இந்திய அளவில் தமிழகம் நெல் உற்பத்தியில் முதன்மை மாநிலமாக விளங்குகிறது. நவீன தொழில் நுட்பங்கள் , புதிய ரகங்கள், இயந்திரமாக்குதல் போன்ற தொழில் நுட்பங்களை முழுமையாக பயன்படுத்தினால் தற்போதைய மகசூலை விட 50 சதவீதம் கூடுதலாக மகசூல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.தமிழக அரசு நெல் இயந்திர நடவு சாகுபடியை ஊக்குவிக்க ஒரு எக்டேருக்கு மூன்றாயிரம் ரூபாய் மானியம் வழங்குகிறது. மேல்மலையனூர் வட்டாரத்தில் நடப்பாண்டில் 1200 எக்டேரில் இயந்திர நடவு சாகுபடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தில் ஒரு விவசாயி 2 எக்டேர் வரையில் பயன் பெறலாம். சிட்டா அடங்கல், இயந்திர நடவு போட்டோ, ஆதார் எண், ஒருங்கிணைந்த விவசாயிகள் கையேடு எண் மற்றும் வங்கி கணக்கு எண் ஆகியவற்றுடன் தங்கள் பகுதியில் உள்ள உதவி வேளாண் அலுவலரிடம் பதிவு செய்து விவசாயிகள் பலனடையலாம்.
இவ்வாறு வேளாண் உதவி இயக்குனர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment