Thursday, September 3, 2015

சம்பா நடவு பணிகளுக்கு ரூ.3 ஆயிரம் மானியம்


பள்ளிபாளையம்: "பள்ளிபாளையம் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதியில், ட்ரே மூலம் சம்பா நடவு பணிகள் மேற்கொள்ள, ஒரு ஏக்கருக்கு 3,000 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது' என பள்ளிபாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் அசோக் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை: பள்ளிபாளையம் வட்டாரத்தில், நடவு சம்பா பருவத்தில் இயந்திரத்தைக் கொண்டு நடவு பணிகள் மேற்ககொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பள்ளிபாளையம் வட்டாரத்திற்கு அலமேடு, குமாரபாளையம், ஆலாம்பாளையம், களியனூர் உட்பட்ட பகுதிகளில் மட்டும், 500 ஏக்கர் பரப்பளவில் இயந்திரத்தின் ட்ரே மூலம் நடவு செய்யப்பட்டுள்ளது. ஒரு ஏக்கர் நடவு செய்ய, 80 தட்டுகள் தேவைப்படுகிறது. நன்கு சலிக்கப்பட்ட மண்ணை இந்த ட்ரேவில் நிரப்பி, அதன் மீது விதைகளை தூவி விட வேண்டும். பூவாளி மூலர் நீர் தெளிக்க வேண்டும். ஏக்கருக்கு, 12 கிலோ விதை தேவைப்படுகிறது. இதையடுத்து அலமேடு பகுதியில் உள்ள ரங்கசாமி என்பவரது விவசாயி நிலத்தில் மேற்குறிப்பிட்ட முறைப்படி நடவு செய்யப்பட்ட நாற்றங்களை மாவட்டவேளாண்மை இணை இயக்குனர், துணை இயக்குனர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், பள்ளிபாளையம் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ட்ரே மூலம் சம்பா நடவு பணிகள் மேற்கொள்ள, ஒரு ஏக்கருக்கு, 3,000 ரூபாய் பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது. விபரங்களுக்கு பள்ளிபாளையம் வேளாண்மை வரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment