மண்வளம் அறிந்து அதற்கேற்ப சமச்சீர் உரமிட்டால் அதிக மகசூல் பெறலாம் என்றார் அரியலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் நா. பன்னீர்செல்வம்.
அரியலூர் மாவட்டம், தா.பழூர் வட்டாரம், கோடாலிகருப்பூர்
கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் 70 விவசாயிகளுக்கு மண்வள அட்டைகளை வழங்கி
அவர் மேலும் பேசியது: தேசிய மண்வள அட்டை இயக்கம் 2015-16 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு
வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் அனைத்து விவசாயிகளுக்கும் 3
ஆண்டுகளுக்கு ஒரு முறை விவசாயிகள் வயல்களிலிருந்து மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மண்வள
அட்டை வழங்கப்பட்டு வருகின்றது.அரியலூர் மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் உள்ள
195 வருவாய் கிராமங்களில் 2015-16 முதல் 2017-18 முடிய மொத்தம் 26,116 மண் மாதிரிகள்
சேகரிக்கத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. நிகழாண்டில் 69 வருவாய் கிராமங்களில் 6,888
மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு 3,310 மண் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
இம்மண்வள அட்டை பரிந்துரை மூலம் பயிர்களுக்கு தேவையான
சத்துகளின் தேவை அறிந்து உரமிட்டு மண்வளத்தை பாதுகாக்க முடியும். உரத்துக்கான செலவையும்
குறைக்கலாம். எனவே விவசாயிகள் அனைவரும் உரப் பரிந்துரையின் படி உரம் இட்டு செலவை குறைத்து
அதிக லாபம் பெறலாம் என்றார் அவர். இந்நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட தரக்கட்டுப்பாடு
வேளாண்மை உதவி இயக்குநர் க.முரளிதரன், தா.பழூர் வேளாண்மை உதவி இயக்குநர் பழனிசாமி ஆகியோர்
கலந்து கொண்டனர்.
http://www.dinamani.com/edition_trichy/ariyalur/2015/09/21/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-/article3038465.ece
No comments:
Post a Comment