கோவில்பட்டி அருகேயுள்ள மேலஈரால் கிராமத்தில் விவசாயிகளுக்கு
மண் புழு உரம் தயாரித்தல் பயிற்சியும், மானாவாரியில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்தல்
குறித்த விளக்கமும் அளிக்கப்பட்டது.
கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி மாணவர்கள் இம்முகாமில்
பங்கேற்று விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.
மண் புழு உரம் தயாரிக்க 3 அடி அகலம், 6 அடி நீளம்,
2 அடி உயரமுடைய உரத்தொட்டி அமைத்து அதில் சிறுசிறு கற்கள், விவசாயக் கழிவுகள், காய்கனி
கழிவுகள், மாட்டுச் சாணம், தேவைக்கேற்ப மண் புழு ஆகியவற்றை படுக்கைவசமாக நிரப்ப வேண்டும்.
ஒவ்வொரு அடுக்குக்குப் பிறகும் சாண கரைசலை தெளித்த
பின், 45 - 60 நாள்களில் 10 -15 கிலோ அளவுள்ள மண் புழு உரம் பெறலாம்.
ஒருங்கிணைந்த பண்ணையத்தில், மானாவாரி நிலத்திற்கு
ஏற்ப கால்நடை வளர்ப்பு, பயிர் வளர்ப்பு, மீன் வளர்ப்பு, உயிர் எரிவாயு, வேளாண் காடுகள்
அமைத்தலின் முக்கியத்துவம், இத்திட்டத்துக்கான அரசு மானியம் குறித்தும் எடுத்துரைத்து
துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினர்.
முகாமுக்கு கோவில்பட்டி வேளாண் உதவி இயக்குநர் சாந்தி
ராணி தலைமை வகித்தார். வேளாண் அலுவலர் ஹரிபுத்திரன் முன்னிலை வகித்தார்.
விவசாயிகளின் கேள்விகளுக்கு அதிகாரிகள் பதிலளித்ததுடன்,
அந்தந்தப் பகுதியிலுள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகுமாறும் கேட்டுக் கொண்டனர்.
http://www.dinamani.com/edition_thirunelveli/tuticorin/2015/09/20/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1/article3037401.ece
No comments:
Post a Comment