Monday, September 7, 2015

வேளாண் கல்லூரியில் செப். 9-ல் கலந்தாய்வு தொடக்கம்


காரைக்கால் வேளாண் கல்லூரியில் இளங்கலை படிப்புக்கான கலந்தாய்வு 9-ம் தேதி தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் பண்டித ஜவாஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு :  2015-16-ம் ஆண்டுக்கான இளங்கலை வேளாண் பட்டப்படிப்புக்கு வரும் 9, 10 மற்றும் 11-ம் தேதிகளில் கலந்தாய்வு நடைபெறுகிறது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த மாணவ மாணவியருக்கு 9 மற்றும் 10 ம் தேதி கலந்தாய்வு நடைபெறுகிறது.
கல்லூரியில் இணையதளத்தில் வெளியிட்டுள்ள தகுதி பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல் 125 மாணவ மாணவிகளுக்கும் மற்றும் சிறப்பு ஒதுக்கீட்டின்படி உள்ள இடங்களுக்கும், கலந்தாய்வு நடைபெறவிருக்கிறது. புதுச்சேரி யூனியன் பிரதேசம் அல்லாத பிற மாநிலத்தவருக்கான கலந்தாய்வு 11-ம் தேதி நடைபெறவுள்ளது. முதல்கட்ட கலந்தாய்வு முடிந்தவுடன், இந்த ஆண்டின் பட்டப்படிப்பு சேர்க்கைக்கான காலியிடம் இருப்பின், கல்லூரி இணையதள முகவரியில் வெளியிடப்படும்.



http://www.dinamani.com/edition_trichy/nagapattinam/2015/09/06/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D.-9-%E0%AE%B2%E0%AF%8D-/article3013243.ece

No comments:

Post a Comment