தேனி:கால்நடை தீவன அபிவிருத்தி திட்டத்தில் 70 பேருக்கு 75 சதவீத மானியத்தில் நீர் தெளிப்பான் வழங்கப்படுகிறது.தேனி மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்து கால்நடை வளர்ப்பு தொழில் உள்ளது. பருவமழை பொய்க்கும் மாதங்களில் கால்நடைகள் தீவன தட்டுப்பாடு ஏற்பட்டு பாதிக்க கூடாது என்பதற்காக கால்நடை துறை சார்பில் கால்நடை தீவன அபிவிருத்தி திட்டம் மூலம் தீவன வளர்ப்பு திட்டம் அமல்படுத்தப்படுகிறது. 75 சதவீத மானியத்தில் நீர் தெளிப்பான், ஐந்து முதல் பத்து பால்மாடுகள் வளர்க்கும் விவசாயி ஒரு ஏக்கரில் கோ-4, கோ-5 போன்ற கால்நடை தீவனம் பயிரிடுவோருக்கு ரூ.25 ஆயிரம் மதிப்பிலான நீர் தெளிப்பான் 75 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது. விவசாயி பங்கு தொகையாக ரூ.6290 செலுத்தினால் போதும். அரசு மானியமாக ரூ.18,750 வழங்கும்.
இதன் மூலம் நீர் தெளிப்பான் அமைத்து கால்நடை புல் வளர்ப்பிற்கு பயன்படுத்தி கொள்ளலாம். இத்திட்டத்தில் 70 விவசாயிகள் பயன்பெறலாம்.
இத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், குத்தகை ஆவணங்கள் போன்றவற்றுடன் அந்தந்த பகுதியில் உள்ள கால்நடை உதவி மருத்துவர்களை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என தேனி மாவட்ட கால்நடை மண்டல இயக்குனர் தனசேகரன் தெரிவித்துள்ளார்.
உலகத் திரைப்பட விழா நிறைவு
கம்பம், செப். 1-
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், கம்பம் நிழல் திரைப்பட சங்கம் சார்பில் கம்பத்தில் உலகத்திரைப்படவிழா நடந்தது.
திரைப்பட இயக்குனர் ஜோ.மல்லூரி, த.மு.எ.க.சங்க மாநில துணை பொதுச்செயலாளர் லட்சுமிகாந்தன் துவக்கி வைத்தனர். இயக்குனர் வசந்தபாலன் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஒவ்வொரு நாளும் 5 திரைப்படங்கள் வீதம் மொத்தம் 15 படங்கள் திரையிடப்பட்டது. தமிழில் ருத்ரய்யா இயக்கிய "அவள் அப்படித்தான்,' மணிகண்டன் இயக்கிய "காக்காமுட்டை,' தாமிரா இயக்கிய "மெஹர்,' பாலசந்தர் இயக்கிய "தண்ணீர் தண்ணீர்' ஆகிய தமிழ்படங்கள் திரையிடப்பட்டன.
"ஆதமின்டே மகன் அபு' என்ற சலிம் அகமது இயக்கிய மலையாள படம், "தி கோல்டன் எரா' என்ற சீன மொழி படமும் வரவேற்பை பெற்றது.இறுதிநாளான நேற்று மாலை இயக்குனர் கரு.பழனியப்பன், ஜோ.மல்லூரி, சினிமா வசனகர்த்தா சௌபா, த.மு.எ.க.சங்க மாநில பொறுப்பாளர் கருணா, மாவட்ட செயலாளர் உமர்பாரூக், ஒருங்கிணைப்பாளர் தமிழ்மணி, நகரசெயலாளர் அபுதாகீர், சுருளிப்பட்டி சிவாஜி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Source:
http://www.dinamalar.com/district_detail.asp?id=1331992
No comments:
Post a Comment