கம்பம்:""வீரிய ஒட்டு ரக நெல் உற்பத்தியை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு மானியமும், உற்பத்தி செய்யப்படும் வீரிய ஒட்டு ரக நெல்லுக்கு கிலோவிற்கு ரூ. 25 உற்பத்தி மானியமும் வழங்கப்படும்,'' என வேளாண்மைத்துறை இணை இயக்குனர் வெங்கடசுப்ரமணியன் தெரிவித்தார். கம்பம் அருகே உள்ள கோவிந்தன் பட்டியில் விவசாயிகளை உறுப்பினர் களாக கொண்ட பயிர் ஆர்வலர் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தேனி இணை இயக்குனர் வெங்கட சுப்ரமணியன் தலைமை வகித்தார். கம்பம் உதவி இயக்குனர் அசோகன் முன்னிலை வகித்தார். இணை இயக்குனர் வெங்கடசுப்ர மணியன் பேசியதாவது : நெல் சாகுபாடியில் தேனி மாவட்டம் குறிப்பிட்ட இடத்தை பெறுகிறது. கம்பம் பள்ளத்தாக்கில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பில் இருபோக நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. நோய் தாக்காமல் இருப்பது, நல்ல மகசூல் போன்றவற்றை கருத்தில் கொண்டு விவசாயிகள் வீரிய ஒட்டு ரகங்களை தேர்வு செய்து சாகுபடி செய்கின்றனர். விலை அதிகமாக இருந்தாலும் விவசாயிகள் வீரிய ஒட்டு ரகங்களை விரும்பி சாகுபடி செய்கின்றனர். தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் நெல் இயக்கத்தின் கீழ் வீரிய ஒட்டு ரக உற்பத்தியை ஊக்குவிக்க அனுமதி கிடைத் துள்ளது.
எனவே வீரிய ஒட்டுரக நெல் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு எக்டேருக்கு ரூ. 7 ஆயிரத்து 500 மானியமாக வழங்கப்படும். உற்பத்தி செய்யும் வீரிய ஒட்டுரக நெல் கிலோவிற்கு ரூ.25 உற்பத்தி மானியமாக வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இயந்திர நடவு செய்யும் விவசாயிகளுக்கு எக்டேருக்கு ரூ. 3 ஆயிரம் பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். விவசாயிகள் நிலத்தின் சிட்டா, அடங்கல் இயந்திர நடவு செய்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் ரசீது போன்ற வற்றை சம்பந்தப்பட்ட உதவி விவசாய அலுவலர்களிடம் வழங்க வேண்டும், என்றார். கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.
Source:
http://www.dinamalar.com/district_detail.asp?id=1331993
No comments:
Post a Comment