ஓசூர்: ஓசூர், தளி, கெலமங்கலம்
பகுதியில், பயிறு வகைகளின் உற்பத்தியை மேம்படுத்தும் வகையில், 50 சதவீத மானியத்தில்,
டி.ஏ.பி., உரம் வழங்கப்பட உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,
12,800 ஹெக்டேர் பரப்பளவில், பயிறு வகைகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகம்
பேர் துவரை சாகுபடி செய்துள்ளனர். பயிறு வகைகளில் உற்பத்தியை பெருக்க, 2 சதவீத டி.ஏ.பி.,
கரைசல் தெளிக்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,
10,000 ஹெக்டேர் பரப்பளவில், 65 லட்சம் ரூபாய் மானியத்தில் திட்டம் செயல்படுத்தப்பட
உள்ளது. ஓசூர் தாலுகாவில், 1,700 ஹெக்டேர் பரப்பளவிலும், தளி பகுதியில், 2,100 ஹெக்டேர்
பரப்பளவிலும், கெலமங்கலம் பகுதியில், 1,500 ஹெக்டேர் பரப்பளவிலும், 50 சதவீத மானியத்தில்
டி.ஏ.பி., உரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தபட உள்ளது.
இதற்காக ஓசூர், பாகலூர், முதுகானப்பள்ளி,
போடிச்சிப்பள்ளி, அஞ்செட்டி, அந்தேவனப்பள்ளி, தொட்டஉப்பனூர் தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில்
டி.ஏ.பி., உரத்தை இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு விவசாயிக்கு ஒரு
ஹெக்டேருக்கு, 25 கிலோ டி.ஏ.பி., உரம் வழங்கப்படும். அதற்கான மானியத்தை பெற, வங்கி
கணக்கு புத்தக நகலுடன், வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை அணுகி, ஹெக்டேருக்கு, 650
ரூபாய் மானியம் பெற்று கொள்ளலாம்.
No comments:
Post a Comment