கோவை :குளிர்காலத்திலும், தடையின்றி, குண்டு மல்லிகை பூ சாகுபடி செய்வதற்கான,
தொழில்நுட்ப ஆராய்ச்சிகள், வேளாண் பல்கலையில் துரிதமாகியுள்ளன.
மல்லிகை பூவானது, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, மதுரை, திண்டுக்கல், தேனி, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. மல்லிகையில், நவம்பர் - பிப்ரவரி மாதங்களில் (குளிர்காலம்), குறைந்த உற்பத்தியும்; மார்ச் - அக்டோபர் மாதங்களில், அதிக மற்றும் நிலையான உற்பத்தியும் கிடைக்கிறது.இதனால், குளிர்காலத்திலும், குண்டு மல்லியில், அதிக மகசூல் பெறுவதற்காக, வேளாண் பல்கலை, எழிலுாட்டும், மலரியல் துறை சார்பில், ஆராய்ச்சிகள் துவங்கப்பட்டுள்ளது. துறை தலைவர் கண்ணன் தலைமையிலான, பேராசிரியர்கள் மற்றும் பி.எச்.டி., மாணவர்கள் குழு ஈடுபட்டுள்ளனர்.வேளாண் பல்கலை, எழிலுாட்டும், மலரியல் துறை தலைவர் கண்ணன் கூறியதாவது:இந்தியாவில், பாரம்பரிய, கலாசாரப்படி பண்டிகைகள், திரு
விழாக்கள், சுபதினங்களில் அதிகம் விற்பனை செய்யப்படுவது உதிரிப்பூக்கள் தான். இதில், மல்லிகை, ரோஜா முக்கிய பங்கு வகிக்கின்றன.
மல்லிகை பூ சாகுபடி பருவத்தில், குளிர் காலங்களில் உற்பத்தி குறைவு. இதனால், விளைநிலங்களில், மல்லிகை மட்டுமே சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய விவசாயிகளுக்காக, குளிர்காலத்திலும், அதிக மகசூல் தரும்படியான தொழில்நுட்பங்கள், குறித்த ஆராய்ச்சி துவங்கப்பட்டுள்ளது.இதற்கான நிதி, இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் மூலம் பெறப்படுகிறது. தற்போது, ஆராய்ச்சிக்காக, வேளாண் பல்கலை, தாவரவியல் பூங்காவிலுள்ள, ஒரு ஏக்கர் மற்றும் பெரியநாயக்கன்பாளையத்திலுள்ள ஒரு விவசாயி ஒருவரின், ஒரு ஏக்கர் நிலமும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
குளிர்காலத்தில், மல்லிகையில், இலை நன்றாக வளர்ந்தும், பூக்கும் பூக்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். ஆகையால், வளர்ச்சி ஊக்கிகளை மண்ணுக்கு பாதிப்பேற்படுத்தாதவாறு, இலையின் மீது தெளித்து, இலையின் வளர்ச்சியை கட்டுப்படுத்தல் மற்றும் கவாத்து எனும், பழைய இலைகளை நீக்கும் தொழில்நுட்பம் ஆகியவற்றை மையமாக கொண்டு ஆராய்ச்சிகள் செய்யப்படுகின்றன.முதற்கட்ட ஆராய்ச்சியில், 50 சதவீதம் முடிந்துள்ளது. இரண்டாம் கட்ட ஆராய்ச்சி நிறைவுறும் போது, விவசாயிகளிடம் அறிமுகப்படுத்தப்படும். மேலும், இதை கையாளும் முறை குறித்து, பயிற்சிகள் விவசாயிகளுக்கு விரைவில் அளிக்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1345099
No comments:
Post a Comment