கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், சேமங்கி கிராமத்தில்
பட்டு வளர்ச்சித் துறை சார்பில் ஆலோசனைப் பெற்று பட்டுப்புழு வளர்ப்பு மையம் அமைத்து
பயன்பெறும் விவசாயிகள் மல்பரி கன்றுகள் வளர்த்து வருவதை திங்கள்கிழமை ஆய்வு செய்த அவர்
மேலும் கூறியது:
கரூர் மாவட்டத்தில் தற்போது 201 ஏக்கரில் 113 விவசாயிகள்
மல்பரி பயிரிட்டு வளர்த்து வருகிறார்கள். இத்திட்டத்திற்காக ஒரு ஏக்கர் நடவு செய்ய
தமிழக அரசு ரூ. 10,500 மானியம் வழங்குகிறது. மேலும் பட்டு
வளர்ப்புக்கு கூடம் அமைக்க ரூ. 63,000-ம் வழங்குகிறது.
அதுமட்டுமன்றி சொட்டு நீர் பாசன முறையில் பயன்பெற 5 ஏக்கர் வரையுள்ள விவசாயிகளுக்கு
ரூ.30,000-ம்,5 ஏக்கருக்கு மேலுள்ள விவசாயிகளுக்கு ரூ.22,500-ம் மானியமாக வழங்கப்படுகிறது.
மேலும் தளவாட சாமான்கள் (தட்டு,நெற்றிக்கா,கத்திரி,தண்டு
அறுவடை இயந்திரம்,ஸ்பிரேயர்,தட்ப வெப்பநிலை காட்டு கருவி,குளிரூட்டும்
கருவி,மின்விசிறி) வாங்கிட ரூ.52,000 மானியம் வழங்கப்படுகிறது.
இவற்றைத் தவிர பட்டுவளர்ப்பு இன்சூரன்ஸ்,மகளிர் பட்டு விவசாயி மற்றும் பெண் தொழிலாளிகளுக்கு
மருத்துவக் காப்பீடு திட்டமும் வழங்கப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 600 கிலோ பட்டுக் கூடுகள்
உற்பத்தியாகின்றன.
ஒரு கிலோ வெண்பட்டு ரூ.300 வரை சந்தையில் விற்பனையாகிறது.
இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.1.80 லட்சம் வரை வருவாய் ஈட்டப்படுகிறது. இத்திட்டத்திற்கு
செலவாகும் தொகையை பார்க்கும்போது ரூ.50,000 வரை மட்டுமே விவசாய பணிக்காக செலவாகிறது.
இதனால் ஆண்டுக்கு நிரந்தர வருமானமாக இத்தொழில் திகழ்கிறது என்றார்.
பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் வடிவேல், துணை
அலுவலர் கலைச்செல்வி மற்றும் முன்னோடி விவசாயிகள் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment