திருநெல்வேலி மாவட்டத்தில், ஆய்வு செய்த வேளாண் விதைச்சான்று
இயக்குநர் விவசாயிகளுக்கு தரமான விதைகள் வழங்க வேண்டும் என அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
வேளாண்மையில் முக்கிய இடுபொருளாக விளங்கும் விதையின்
முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு சான்று விதை உற்பத்தி, விதை சுத்திப் பணிகளை செய்ய
வேண்டியது அவசியமாகும். திருநெல்வேலி மாவட்டத்தில் வேளாண்துறை விதைச்சான்று மற்றும்
அங்ககச் சான்று இயக்குநர் ர. ஜெயசுந்தர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். திருநெல்வேலி மத்திய
விதைக் கிடங்கு, விதைச் சுத்தி நிலையம் ஆகியவற்றை பார்வையிட்டு விதைச்சுத்திப் பணிகளை
அவர் பார்வையிட்டார்.
அப்போது, தரமான விதை உற்பத்தியில் கலவன்களை உரிய
நேரத்தில் தகுந்த முறையில் நீக்கினால் மட்டும் விதையின் தரத்தை பேண முடியும். தமிழகத்தில்
நெல் சான்று விதைகள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுவதால், சிறந்த முறையில் வேளாண் உற்பத்தி
மேற்கொள்ளப்படுகிறது. ஆகவே, விவசாயிகளுக்கு தரமான விதைகளை வழங்க வேண்டும் என விதைச்சான்று
இயக்குநர், வேளாண் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
இந்த ஆய்வின்போது, திருநெல்வேலி விதைச்சான்று உதவி
இயக்குநர் மூ.மு. முஹம்மதுகாசிம், விதைச் சான்று அலுவலர்கள் மு. வேலுச்சாமி, பா. சிவகுருநாதன்,
பாளையங்கோட்டை வட்டார வேளாண் உதவி இயக்குநர் மகாலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
http://www.dinamani.com/edition_thirunelveli/thirunelveli/2015/09/19/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95/article3035909.ece
No comments:
Post a Comment