Tuesday, September 15, 2015

கால்நடை பாதுகாப்பு மருத்துவ சிசிச்சை முகாம்



.பரமத்தி: கரூர் மாவட்டம், .பரமத்தி யூனியன் அருகில், எலவனூரில் கால்நடைதுறை சார்பில், கால்நடை பாதுகாப்பு திட்ட மருத்துவ சிசிச்சை முகாம் நடந்தது.

சின்னதாராபுரம் கால்நடை மருத்துவர் மோகன்ராஜ் தலைமைவகித்து பேசியதாவது: கறவைமாடுகள் கன்று ஈன்ற பின், மூன்று முறை பருவநிலைக்கு வந்து சினை ஊசி போட்டும் அல்லது காளையுடன் சேர்த்து விட்ட பின்பும், சினை பிடிக்காமல் இருந்தால் அவை மலட்டு தன்மை மாடுகளாக கருதப்படுகிறது. இதனால் கால்நடை விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுவதுடன் பால் உற்பத்தி குறைய வாய்ப்பு உள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட கால்நடைகளை அருகேயுள்ள அரசு கால் நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவரின் உரிய ஆலோசனையை பின்பற்ற வேண்டும். பெரும்பாலும் மாடுகளுக்கு தாது உப்பு சத்து பற்றாக்குறையால் சினை பிடிப்ப தில் தாமதம் ஏற்படுகிறது. எனவே, இதற்கு அரசு கால்நடை மருந்தகங்களை தொடர்பு கொண்டு அங்கு குறைபாடுள்ள கால்நடைகளுக்கு வழங்கப்படும் தாது உப்பு கலவையை மருத்துவரின் ஆலோசனைபடி தினமும், ஒரு மாதத்திற்கு மாடுகளுக்கு வழங்குவதன் மூலம் மலட்டு தன்மையை எளிதில் நீக் கலாம். இவ்வாறு, அவர் பேசினார். முகாமில், மருத்துவகுழுவினர், கோமாரி ,குடற் புழுநீக்கம், ஆண்மை நீக்கம், செயற்கை கருவூட்டல், சினைபரிசோதனை, கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல், நாய்களுக்கு தடுப்பூசிகளை போட்டனர்.


No comments:

Post a Comment