கிருஷ்ணகிரி மாவட்டத்தில், விவசாயிகள் தங்கள் குறைகளை தெரிவிக்க, புதிய மொபைல்போன் வசதி செய்யப்பட்டுள்ளது என, கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வேளாண்மை துறையின் கீழ், மாதந்தோறும் நடக்கும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்படும் மனுக்களுக்கான பதிலை, விவசாயிகளுக்கு அடுத்த மாதம் நடைபெறும் கூட்டத்திற்கு முன்னதாகவே தெரிவிக்க ஏதுவாகவும், விவசாயிகள் தாங்கள் அளிக்கும் மனுவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிந்து கொள்ள ஏதுவாகவும், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்படும் மனுக்கள் தொடர்பாக, அனைத்து துறை அலுவலர்களும் மற்றும் விவசாயிகளும் தொடர்பு அலுவலரை தொடர்பு கொள்ள ஏதுவாக, 89037-12159 என்ற மொபைல் எண் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் குறைகள் குறித்தும், தாங்கள் அளித்த மனுக்களின் விவரம் குறித்தும் இந்த மொபைல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Source : dinamalar
No comments:
Post a Comment