'அசோலா' என்னும் தாவரம் பசுந்தாள் உரமாகவும், கால்நடை தீவனமாகவும் விவசாயிகளிடம் பிரபலமாகி வருவதாக, நம்பியூர் வேளாண்மை உதவி இயக்குனர் ஆசைத்தம்பி தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: பெரணி வகையை சேர்ந்த அசோலா, மாட்டு தீவனமாகவும், கோழி தீவனமாகவும், இயற்கை உரமாகவும் பயன்படுகிறது. தண்ணீரில் வேகமாக வளரும் தன்மை கொண்ட இத்தாவரம், இயற்கை விவசாயிகளுக்கும், இயற்கை உரங்களை பயன்படுத்துபவர்களுக்கு மிகவும் ஏற்றது. இது வளரும்போது காற்றில் உள்ள தழைச்சத்தை ஈர்த்து மண்ணில் சேர்த்து பயிர் வளர்ச்சிக்கு உதவுகிறது. இதை நீர் தேங்கிய நெல் வயலில் இட்டும், தனியாக தொட்டிகளில் வளர்த்தும் பயன்படுத்தலாம். இதில் புரதச்சத்து, 30 சதவீதமும், தாது உப்பு 12 சதவீதமும் உள்ளதால், ஆடு, மாடு, முயல், கோழிகளுக்கு தீவனமாக பயன்படுத்தலாம். இதை வளர்ப்பதால் கரிமப் பொருட்களுடன், யூரியா இடும் செலவும் குறைகிறது. அசோலா இட்ட வயல்களில் களைப்பிரச்னை குறைகிறது. இத்தகைய நல்ல பயன்களை தரும் அசோலாவை உழவர்கள் பயன்படுத்தி, விவசாயிகள் சிறப்பான மகசூல் பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Source : dinamalar
No comments:
Post a Comment