நீடாமங்கலத்தில் இருந்து 1000 டன் நெல் அரவைக்காக ஈரோட்டிற்கு சரக்கு ரெயிலில் அனுப்பும் பணி நேற்று நடந்தது. இதையொட்டி நீடாமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து 87 லாரிகளில் 1000 டன் நெல் மூட்டைகள் நீடாமங்கலம் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் சரக்கு ரெயிலின் 29 பெட்டிகளில் நெல் மூட்டைகளை சுமை தூக்கும் பணியாளர்கள் அடுக்கி வைத்தனர். இதைதொடர்ந்து சரக்கு ரெயில் 1000 டன் நெல் மூட்டைகளுடன் ஈரோட்டிற்கு புறப்பட்டு சென்றது.
source : Dailythanthi
source : Dailythanthi
No comments:
Post a Comment