Monday, February 15, 2016

கறவை மாடு வளர்ப்பு பயிற்சி: மார்ச் 1ம் தேதி துவக்கம்

 தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை மற்றும் கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் வசந்தகுமார் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டம், பண்டுதகாரன்புதூரில் கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரக தொழில் முனைவோர் பயிற்சி மையத்தின் நிதியுதவியுடன் கறவை மாடு வளர்ப்பு பயற்சி, மார்ச், 1ம் தேதி முதல், 8ம் தேதி வரை ஆறு நாட்கள் நடக்கிறது. பயிற்சி, 25 நபர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. பயிற்சியில் அறிவியல் ரீதியான கறவை மாடு வளர்ப்பில் பராமரிப்பு முறைகளான இனங்களை தேர்வு செய்தல், பண்ணை வீட்டமைப்பு, தீவன மேலாண்மை, சாண எரிவாயு உற்பத்தி ஆகிய தலைப்புகள் குறித்து பயிற்சி நடக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Source : dinamalar

No comments:

Post a Comment