புதுச்சேரி:புதுச்சேரி அரசு கால்நடைத்துறை சார்பில், முருங்கப்பாக்கம் கால்நடை கிளை மருத்துவமனையில் கண்காட்சி நடந்தது.45 கிடேரி கன்றுகள் கொண்டு வரப்பட்டன. சிறந்த கிடேரி கன்றுகளை, கால்நடை மருத்துவ குழுவினர் தேர்வு செய்தனர்.
அனைத்து கிடேரி கன்றுகளுக்கு குடற்புழு நீக்கினர். கால் நடை வளர்ப்பு குறித்த கருத்தரங்கம் நடந்தது.
கால்நடைத்துறை இயக்குனர் பத்மநாபன் தலைமை தாங்கினார். இணை இயக்குனர் ராஜ்மோகன் முன்னிலை வகித்தார். கால்நடை மருத்துவர்கள் தமிழ்செல்வன், சுப்பராவ், மற்றும் மரியா கலந்து கொண்டு, தேர்வு செய்யப்பட்ட கன்றுகளுக்கு, முதல் பரிசு ரூ. 500, இரண்டாம் பரிசு ரூ.300, மூன்றாம் பரிசு ரூ.200 வழங்கினர். மொத்தம் 33 கிடேரி கன்றுகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
கால்நடை மருத்துவ உதவியாளர் சாரங்கபாணி நன்றி கூறினார்.
http://www.dinamalar.com/district_detail.asp?id=1333324
No comments:
Post a Comment