Wednesday, September 2, 2015

வேளாண் 'டிப்ளமோ' படிப்பு கலந்தாய்வு இன்று துவக்கம்



கோவை:தமிழ்நாடு வேளாண் பல்கலையில், 'டிப்ளமோ' படிப்புக்கான கலந்தாய்வு இன்று துவங்குகிறது.தமிழகத்தில், வேளாண் பல்கலை யின் கீழ், எட்டு அரசு உதவிபெறும் கல்லுாரிகள், ஆறு தனியார் வேளாண் டிப்ளமோ கல்லுாரிகள் செயல்பட்டுவருகின்றன. இதில், முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்காக, 690 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த மாதம்,இளங்கலை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கான கலந்தாய்வு நடந்து முடிந்தது. டிப்ளமோ படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று துவங்குகிறது. 1,874 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
வேளாண் பல்கலை, டீன் மகிமைராஜ் கூறுகையில், ''டிப்ளமோ படிப்புக்காக நடப்பாண்டு பெறப்பட்ட விண்ணப்பங்களிலிருந்து, தரவரிசை அடிப்படை யில், 800 மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். கலந்தாய்வு இரண்டு நாட்கள் நடக்க உள்ளது. இதில்,காலியிடங்கள் ஏற்பட்டால், அடுத்தகட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும்,'' என்றார்.



No comments:

Post a Comment