தேனி : பப்பாளியில் தேமல் நோய் பாதிப்பிற்குள்ளான செடிகளை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ராஜன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: தேனி மாவட்டத்தில் 232 எக்டேரில் பப்பாளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பப்பாளியில் வீரிய ஒட்டு ரகமான சிவப்பு நிறத்திலான ரெட்லேடி, ரெட் ராயல், ஜிண்டா ரகரங்கள் சாகுபடி செய்யப்படுகிறது.தற்போது பப்பாளியில் வைரஸ் நோய் பாதிப்பு ஏற்படுகிறது. இலைகளில் சாரு உறிஞ்சும் பூச்சிகள் படர்ந்து தேமல் நோய் பாதிப்பு ஏற்படுத்தும். இப்பாதிப்பால் இலைகளின் அளவு குறையும். மரங்களின் ஆயுள் குறையும். நோய் பாதித்த ஒரு ஆண்டில் மகசூல் குறைந்து இழப்பு ஏற்படும். இந்நோய் பாதித்த பப்பாளி பழம் ருசிகுறைந்து சலசலப்பாக இருக்கும்.எனவே, பப்பாளி சாகுபடி செய்த விவசாயிகள் நடவு காலத்தில் இருந்தே பூச்சி தேமல் நோய் பூச்சி தாக்குதல் உள்ளதா என கண்காணிக்க வேண்டும். இதனை தடுக்க 20 நாட்களுக்கு ஒருமுறை பயிர் பாதுகாப்பு மருந்துகள் தெளிக்க வேண்டும். இந்நோய் வந்த பிறகு பயிரை காப்பாற்ற முடியாது. நோய் தாக்கிய மரங்களை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும். மரத்தை வெட்டுவதற்கு பயன்படுத்திய அரிவாள் போன்ற ஆயுதங்களை அடுத்து பயன்படுத்துவதற்கு முன் நீரில் நன்கு கழுவி பயன்படுத்த வேண்டும், என்றார்.
No comments:
Post a Comment