Wednesday, September 2, 2015

மணிலா விவசாயிகளுக்கு பண்ணை பள்ளி நிகழ்ச்சி


புதுச்சேரி : காலாப்பட்டு பண்ணை தகவல், விவசாயிகள் ஆலோசனை மையம் சார்பில் சஞ்சீவி நகரில், மணிலா பயிரிடும் விவசயி களுக்கு நிலக்கடலை உற்பத்தியை பெருக்க, புதிய தொழில் நுட்பங்கள் குறித்த பண்ணை பள்ளி நிகழ்ச்சி நடந்தது.
நிலக்கடலை சாகுபடியில் ஈடுபட்டு முன்னோடியாக திகழும் சுப்பிரமணியன் கலந்து கொண்டு ஆலோசனைகள் மற்றும் நிலக்கடலை சாகுபடியில் பின்பற்ற வேண்டிய வழி முறைகள் குறித்து பேசினார்.இந்நிகழ்ச்சியின் துவக்கமாக காலாப்பட்டு உழவர் உதவியாக வேளாண் அலுவலர் அனுப்குமார் வரவேற்றார். கூடுதல் வேளாண் இயக்குநர் ரவிப்பிரகாசம் கலந்து கொண்டு ஆத்மா திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து பேசினார்.வேளாண் அலுவலர் திருநாதன் ஒருங்கிணைந்த உர நிர்வாகம் பற்றியும், சாப்ஸ் நிறுவன நிறுவனர் அப்துல் காதர், சோலார் விளக்கு பொறி வைத்து பூச்சிகளை கட்டுப்படுத்துவது குறித்தும் விளக்கினர்.ஏற்பாடுகளை கிராம விரிவாக்க பணியாளர் பழனி மற்றும் மாதவன் ஆகியோர் செய்தனர்.


http://www.dinamalar.com/district_detail.asp?id=1332575

No comments:

Post a Comment