Tuesday, September 22, 2015

கபினியில் 4,000 கனஅடி நீர் திறப்பு: மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு




மேட்டூர்: கபினி அணையில் திறக்கப்பட்ட நீர் வந்தடைந்ததால், நேற்று மாலை மேட்டூர் அணை நீர்வரத்து, வினாடிக்கு, 4,500 கனஅடியாக அதிகரித்தது.

கர்நாடகாவின், கபினி அணையில் இருந்து, இரு நாட்களுக்கு முன் வினாடிக்கு, 4,000 கனஅடி நீர் காவிரியாற்றில் திறக்கப்பட்டது. இந்த நீரின் ஒரு பகுதி, கபினியில் இருந்து, 241 கி.மீ., தூரத்திலுள்ள மேட்டூர் அணையை, நேற்று மாலை வந்தடைந்தது. இதனால், நேற்று காலை வினாடிக்கு, 1,114 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து, நேற்று மாலை வினாடிக்கு, 4,500 கனஅடியாக அதிகரித்தது. நேற்று, அணை நீர்மட்டம், 68.690 அடியாகவும், நீர் இருப்பு, 31.814 டி.எம்.சி.,யாகவும் இருந்தது. கபினி அணையில் திறக்கப்பட்ட, 4,000 கனஅடி நீர் வந்தாலும், மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு, 13 ஆயிரத்து, 800 கனஅடி நீர் பாசனத்துக்கு வெளியேற்றுவதால், வரும் நாட்களிலும் மேட்டூர் அணை நீர்மட்டம் குறையும்.

http://www.dinamalar.com/district_detail.asp?id=1347794

No comments:

Post a Comment