சிதம்பரம், பின்னத்தூர், பரங்கிப்பேட்டை பகுதிகளில்
உள்ள வட்டார விரிவாக்க மையங்களில் சம்பா பருவத்துக்கேற்ற புதிய நெல் ரகங்கள் மானிய
நிலையில் விவசாயிகளுக்கு விநோயகம் செய்யப்படுகிறது என பரங்கிப்பேட்டை வட்டார வேளாண்
உதவி இயக்குநர் சு.ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மானிய விலையில் சம்பா பருவத்துக்கேற்ற புதிய நெல்
ரகங்கள் தேசிய உணவு பாதுகாப்பு இயக்க திட்டத்தின் கீழ் (2015-16) விவசாயிகளுக்கு விநியோகம்
செய்யப்படுகிறது. இதில் சகத 34449, அஈப(த) 49, இர்(த) 50, சுவர்ணா சப்-1 ஆகியவை போதிய
அளவில் வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பில் வைத்து, கிலோ ஒன்றுக்கு ரூ.10 மானியத்தில்
விநியோகிக்கப்படுகிறது.
மேலும் ஆடப 5204, அஈப 39, பொன்னி, இஞ43 போன்ற நெல்
ரகங்களின் விதை கிராமத் திட்டத்தின் கீழ் கிலோ ஒன்றுக்கு ரூ.10 மானியத்தில் விநியோகம்
செய்யப்பட்டு வருகிறது. தேவைப்படும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட வேளாண் விரிவாக்க மையங்களை
அணுகி மானிய விலையில் விதைகளைப் பெற்று பயன்பெறலாம் என அதில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment