Monday, September 21, 2015

வேளாண்.பல்கலையில் மசாலா பொடிகள் தயாரிக்கும் பயிற்சி 29ம் தேதி துவக்கம்



கோவை, : கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வரும் 29 மற்றும் 30ம் ேததிகளில் நடக்கிறது. இதில் மசாலா பொடிகள், பாகற்காய் ஊறுகாய், தயார்நிலை பேஸ்ட், கத்திரிக்காய் ஊறுகாய், காளான் ஊறுகாய், வெங்காய ஊறுகாய், வாழைப்பூ ஊறுகாய் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ரூ.1500 செலுத்தி தங்களது பெயரை முன்பதிவு செய்துக்கொள்ளலாம். முன்பதிவு செய்ய வரும் 25ம் தேதி கடைசி நாள். மேலும் விவரங்களுக்கு : 0422-6611340 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=491904&cat=504

No comments:

Post a Comment