Tuesday, June 7, 2016

தமிழகத்தில் மண்டல வாரியாக தேசிய நெல் திருவிழா சிறப்பு கூட்டத்தில் தீர்மானம்

தமிழகத்தில் மண்டல வாரியாக தேசிய நெல் திருவிழா நடத்துவது என்று சிறப்பு கூட்டத்தில் தீர்மானம் 
நிறைவேற்றப்பட்டது. திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரெங்கம் கிரியேட் இயற்கை வேளாண் பண்ணையில் தேசிய அளவிலான நமது நெல்லை காப்போம் மாநில ஒருங்கிணைப்பாளர்களின் சிறப்பு கூட்டம் கேரளா மாநில ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் ஸ்ரீதர் தலை
மையில் நடந்தது. 

கிரியேட் சேர்மன் துரைசிங்கம், நிர்வாக அறங்காவலர் பென்னம்பலம் முன்னிலை வகித்தனர்.  கிரியேட் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்
கண்ணா வரவேற்றார். கூட்டத்தில் நெல் திருவிழாவை தமிழகத்தில் மண்டல வாரியாக மதுரை, கோவை, திருச்சி, சென்னை மாவட்ட 
தலைநகரில் நடத்துவது. அனைத்து விவசாயிகளுடைய கடன்களையும் தள்ளுபடி செய்ய தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். விளை நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றுவதற்கு மற்ற மாநிலங்களில் உள்ளதுபோல் தடை சட்டம் கொண்டுவர வேண்டும். 

ஆறு, வாய்க்கால்கள், கண்ணி, ஏரி, குளம், குட்டைகளில் குடிசை அமைத்து ஆக்கிரமித்து உள்ள ஏழை மக்களுக்கு வசிக்க மாற்று ஏற்பாடு செய்வதுடன் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றி பொது பயன்பாட்டுக்கும், போக்குவரத்துக்கும் கொண்டுவர வேண்டும். இயற்கை வேளா ண்மை செய்ய ஏக்கருக்கு ரூ.5,000 வீதம் மானியம் வழங்க வேண்டும்.  கர்நாடக மாநில ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணபிரசாத், மேற்கு வங்காளம் அலாவுதின், ஒரிசா சாரங்கி, தெலங்கானா நரசிம்ம ரெட்டி, ஆந்திரா ஜேசு மற்றும் அந்தந்த மாநில பிரதிநிதிகள் பங்கேற்றனர். தமிழ்நாடு  ஒருங்கிணைப்பாளர் நெல் ஜெயராமன் நன்றி கூறினார்.

Source : Dinakaran

No comments:

Post a Comment