Friday, June 24, 2016

இயந்திர நடவுக்கு ரூ.4000 பின்னேற்பு மானியம் ஒதுக்கீடு

பேராவூரணி வேளாண்மை கோட்டத்திற்கு குறுவை தொகுப்பு திட்டத்தில் 15.27 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து பேராவூரணி வேளாண்மை உதவி இயக்குநர் ஈஸ்வர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது. குறுவை சாகுபடி திட்டத்தில் பேராவூரணி வட்டார விவசாயிகள் பயன்பெறும் வகையில் 15.27 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இத் திட்டத்தின் கீழ் இயந்திரம் மூலம் நடவு மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் பின்னேற்பு மான்யமாக அவர்களது வங்கி கணக்கில் வரவு வைத்திட 310 ஏக்கர் இலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு 100 ஏக்கருக்கு நெல் நுண்ணூட்டம், 250 ஏக்கருக்கு சிங்சல்பேட் நுண்ணூட்ட உரமும் இலவசமாக பேராவூரணி வேளாண்மை விரிவாக்க மையம் மூலம் வழங்கப்படும். 

குறுவை சாகுபடி மேற்கொள்ள இயலாத விவசாயிகளுக்கு சுமார் 50 ஏக்கருக்கு உளுந்து விதை 8 கிலோ ரூ.900 மானியத்தில் வழங்கப்படும். கோடை உழவு செய்து விதைக்கப்படும் உளுந்து செடியை மடக்கி உழுது மண்ணின் தரம் உயர்த்த ஏக்கருக்கு பின்னேற்பு மான்யம் ரூ.500 வழங்கப்படும். இது தொடர்பான குறுவை தொகுப்பு திட்ட விழிப்புணர்வு முகாம்கள் ஒட்டங்காடு, மதன்பட்டவூர், களத்தூர் கிராமங்களில் நடைபெற்றது. மற்ற கிராமங்களில் விழிப்புணர்வு முகாம்கள் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Source : Dinakaran

No comments:

Post a Comment