Saturday, June 18, 2016

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் மீன் வளர்ப்பு, காய்கறி சாகுபடி பயிற்சி பங்கேற்க அதிகாரி அழைப்பு

நாமக்கல் அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் செயல்படும் வேளாண் அறிவியல் நிலையத்தில் கொடுவா மீன் வளர்ப்பு மற்றும் கொடிவகை காய்கறிகள் சாகுபடியில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து வேளாண் அறிவியல் நிலைய ஒருங்கிணைப்பாளர் அகிலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் செயல்படும் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 20ம் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு கொடுவா மீன் வளர்ப்பு என்ற தலைப்பில் ஒருநாள் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது. இப்பயிற்சியில், கொடுவா மீன்களின் வகைகள், உணவு பழக்கம், இனப்பெருக்கம், தொட்டி மற்றும் வளர்ப்புக் குளங்களில் பராமரிப்பு, நீர்த்தர மேலாண் மற்றும் வளர்ப்பு பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பங்கள் குறித்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது. 

இதேபோல், மறுநாள் (21ம் தேதி) காலை 9 மணிக்கு, ‘கொடிவகை காய்கறிகள் சாகுபடியில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை’ என்ற தலைப்பில் ஒருநாள் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது. இப்பயிற்சியில், கொடிவகை காய்கறிகள் சாகுபடியில், மண் மற்றும் பாசன நீர் ஆய்வின் முக்கியத்துவம், ஒருங்கிணைந்த உர மேலாண்மை, உரங்கள் அளிக்கும் முறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது. 

எனவே முகாம்களில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் பங்கேற்கலாம். விருப்பம் உள்ளவர்கள், நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் செயல்படும் வேளாண் அறிவியல் நிலையத்துக்கு நேரில் வந்தோ அல்லது 04286 266345, 266650 என்ற தொலைபேசி மூலமாகவோ தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Source : Dinakaran

No comments:

Post a Comment