Friday, June 24, 2016

உளுந்து பயிரை தாக்கும் மஞ்சள் சோகை நோய்


உளுந்து பயிரை தாக்கும் மஞ்சள் சோகை நச்சுயிரியை கட்டுப்படுத்தும் முறைகளை வேளாண்மை அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேல்மலையனுார் வேளாண் உதவி இயக்குனர் பெரியசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மேல்மலையனுார் தாலுகாவில் கோடை பருவத்தில் உளுந்து சாகுபடி செய்துள்ளனர். இப்பயிரில் சில இடங்களில் மஞ்சள் தேமல் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.
இளம் இலைகளில் மஞ்சள் நிற புள்ளிகள் தோன்றி, முடிவில் இலை மஞ்சளாக மாறும். பயிர்கள் குட்டையாகவும், காலம் தாழ்த்தி முதிர்ச்சி, குறைந்தளவு பூக்கள் மற்றும் காய்கள் உற்பத்தி உள்ளிட்டவை இந்நோய் தாக்குதலின் அறிகுறிகளாகும்.
நோய் எதிர்ப்பு சக்திக்கு வம்பன்-4, 5 பயிரிடலாம், வரப்பு பயிராக ஏழு வரிசையில் சோளத்தை பயிரிடல் வேண்டும். இமிடாகுளோபிரிட் 70 குறிப்பிட்ட அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும். உளுந்து மஞ்சள் சோகை நச்சுயிரி தாக்கிய பயிர்களை முளையிலேயே களைந்து கட்டுப்படுத்தலாம்.
புரோபினோபாஸ் 750 மி.லி., அல்லது டை மெத்தோயேட் 750 மி.லி., ஒரு எக்டர் என்ற அளவில் விதைத்து 25 மற்றும் 40 நாள் தழை தெளிப்பு செய்து கட்டுப்படுத்தலாம்.
வெர்டிசிலியம் லெகாணி உயிரியல் பூச்சி மருந்தினை எக்டர் ஒன்றுக்கு 3 கிலோ அளவில் நீரில் கலந்து மாலை நேரத்தில் தெளிக்கலாம். இதை விதைப்பு செய்த 20 மற்றும் 35 நாள் தழை தெளிப்பு செய்ய வேண்டும். வெள்ளை ஈயை கட்டுப்படுத்தவதன் மூலம் மஞ்சள் நோயை கட்டுப்படுத்த முடியும்.


Source : Dinamalar

No comments:

Post a Comment