Tuesday, June 28, 2016

ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை வருவாய் ஈட்டலாம்

தஞ்சை அருகே மெலட்டூரில் வேளாண்மைத்துறை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் வழங்குதல், பயறுவகை பயிர் வயல் விழா நேற்று நடந்தது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி ேபசுகையில், தமிழகத்தில் 72 ஆயிரம் டன்களாக இருந்த  உணவு உற்பத்தி 4 ஆண்டுகளுக்கு முன்பு 100 லட்சம் டன்களாக அதிகரித்தது.  பின்னர் இது 108 லட்சம் டன்களாகவும், 112 லட்சம் டன்களாகவும், 129 லட்சம்  டன்களாகவும் உயர்ந்தது. விவசாயிகளின் உழைப்பும், தொழில்நுட்ப பயன்பாடுமே  இந்த இலக்கை எட்ட காரணம் என்றார்.

இதைதொடர்ந்து நிருபர்களுக்கு அளித்த பேட்டி: குறுவை சாகுபடி செய்ய முடியாத இடத்தில் மழைநீர், இருக்கும் தண்ணீர் ஆகியவற்றை பயன்படுத்தி 60 நாள் பயிரான உளுந்து சாகுபடி செய்தால் ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை வருவாய் ஈட்ட முடியும். பயறு வகையில் விதை, விதை நேர்த்திக்கு அரசு உதவி செய்கிறது. மேலும் உளுந்து கிலோவுக்கு ரூ.120 என விவசாயிகளே தேடி வந்து வழங்குகின்றனர் என்றார்.

source : Dinakaran

No comments:

Post a Comment