Tuesday, June 21, 2016

பருவம் தப்பி பெய்யும் மழையால் சேதமான பயிருக்கும் இழப்பீடுவேளாண் அதிகாரி தகவல்

பருவம் தப்பி பெய்யும் மழையால் சேதமான பயிருக்கும் இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக வேளாண் அதிகாரி தெரிவித்தார். இது குறித்து விளக்கமளிக்கும் வகையில் சோழமாதேவியில் வரும் 22ம் தேதி பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்ட கருத்தரங்கு மற்றும் வேளாண் கண்காட்சி நடைபெறுகிறது. இது குறித்து சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மைய தலைவர் நடனசபாதி  வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

அரியலூர் மாவட்டம், சோழமாதேவியில் செயல்பட்டு வரும் கிரீடு வேளாண் அறிவியல் மையத்தில் நாளை மறுதினம் (ஜூன் மாதம் 22ம் தேதி) புதன்கிழமை காலை 10.00 மணியளவில் பிரதம மந்திரியின் விவசாய பயிர் காப்பீட்டுத் திட்டம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் வேளாண் கண்காட்சி மைய வளாகத்தில் நடைபெற உள்ளது. சிதம்பரம் தொகுதி எம்பி சந்திரகாசி, ஜெயங்கொண்டம் தொகுதி எம்எல்ஏ ராமஜெயலிங்கம் ஆகியோர் தலைமை உரையாற்றுகின்றனர். மேலும் கருத்தரங்கில் மாவட்ட அளவிலான துறை அதிகாரிகள் கலந்து கொண்டு துறைகளின் திட்டங்களை எடுத்துக் கூற உள்ளனர். 

இம்முகாமில் பிரதம மந்திரியின் விவசாய பயிர் காப்பீட்டுத் திட்டம் பற்றி விரிவாக எடுத்துரைக்க பொது காப்பீட்டு அலுவலகங்களில் இருந்து அலுவலர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.  மேலும் இந்த திட்டத்தின் சிறப்பம்சமாவது, இந்த திட்டம், பயிர் காப்பீடு மீது இதற்கு முன் அரசு ஒருபோதும் வழங்காத திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் இன்றைய தேதி வரை விவசாயிகள் கட்டிய மிகக்குறைவான பிரிமியம் இதுவாகத் தான் இருக்கும். 

இதுவரை உணவு பயிர்கள், பருப்புகள் மற்றும் எண்ணெய்வித்துக்களுக்கு ஒரு பருவம், ஒரு பிரிமியம் என்று இருந்தது, இனிமேல் குறுவை பயிருக்கு 2 சதவீதம் மற்றும் சம்பாவிற்கு 1.5 சதவீதமாக பிரிமியம் இருக்கும், மேலும் இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கும். அதேபோன்று குறிப்பிட்ட துயர் நிகழ்வுகள் பட்டியலில் வெள்ளப்பெருக்கும் முதன்முறையாக சேர்க்கப்பட்டுள்ளது, நாடு முழுவதும் அறுவடைக்கு பிறகு வீசிய புயல்காற்று மற்றும் பருவம் தப்பிய மழை காரணமாக உண்டான நஷ்டங்களும் இந்த திட்டத்தில் முதன்முறையாக சேர்க்கப்பட்டுள்ளது. 

துல்லியமாக விளைச்சலை கணக்கீடு செய்யவும், காப்பீட்டு தொகை கோரிக்கைகளை விரைவாக தீர்மானிக்கவும், அலைபேசி மற்றும் செயற்கைகோள் தொழில்நுட்பத்தினை கட்டாயமான உபயோகம் குறுவை 2016 பருவத்திலிருந்து இந்த திட்டம் அமல்படுத்தப்படும். எனவே அரியலூர் மாவட்ட விவசாயிகள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Source : Dinakaran

No comments:

Post a Comment