Thursday, June 30, 2016

தலைவலியை போக்கும் மல்லிகை



நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் எலுமிச்சை, மல்லிகை போன்றவற்றை கொண்டு தலைவலியை போக்கும் பல காரணங்கள் உள்ளன. கடும் உழைப்பு, அதிகமாக சாப்பிடுவது, பசி, போதிய தூக்கம் இல்லாதது, கண்களில் குறைபாடு, காய்ச்சல் போன்றவற்றால் தலைவலி ஏற்படும். அதிகமான தலைவலியால் குமட்டல், வாந்தி போன்ற பிரச்னைகள் ஏற்படும். எலுமிச்சம் பழத்தை பயன்படுத்தி தலைவலியை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: நல்லெண்ணெய், எலுமிச்சை.

ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் விடவும். இதில் வெட்டி வைத்த எழுமிச்சம் பழத்துண்டுகளை போட்டு நன்றாக வதக்கவும். இதை ஒரு மெல்லிய பருத்தி துணியில் வைத்து கட்டவும். தலைவலி இருக்கும்போது இளம்சூட்டுடன் ஒத்தடம் கொடுக்கவும். அப்போது நெற்றியில் ஒட்டும் எண்ணெயை கொண்டு மசாஜ் செய்து அரைமணி நேரம் தூங்கி எழுந்தால் தலைவலி சரியாகும்.மல்லிகை இலையை பயன்படுத்தி தலைவலிக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்:

மல்லிகை இலை, சுக்குப்பொடி, பால். பசையாக அரைத்த மல்லிகை இலையை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். இதில் சிறிது சுக்குப்பொடி, பால் சேர்த்து வேகவைக்கவும். பின்னர், இதை மெல்லிய துணியில் வைத்து இளம்சூட்டுடன் நெற்றியில் அரை மணி நேரம் கட்டிவைத்தால் தலைவலி குணமாகும். மல்லிகையில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. ரத்த அழுத்தம் அதிகமாவதால் ஏற்படும் தலைவலிக்கு மல்லிகை இலை மருந்தாகிறது. வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி தலைவலிக்கான மருந்து தயாரிக்கலாம்.

பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொள்ளவும். இதில், ஏலக்காய், லவங்கப்பட்டை, பெருங்காயம், சாதிக்காய் ஆகியவற்றை பொடி செய்து போடவும். தைலப்பதத்தில் காய்ச்சி வடிக்கட்டி எடுக்கவும். இதை மேல் பூச்சாக போடும்போது தலைவலி குணமாகும். கழுத்து வலி, இடுப்பு வலிக்கு மருந்தாக அமைகிறது.

பல்வேறு நன்மைகளை கொண்ட மருதாணியை பயன்படுத்தி உடல் வலியை போக்கும் மருத்துவத்தை காணலாம். வீட்டில் அழகு சாதனமாக பயன்படுத்தும் மருதாணி இலையை நன்றாக நீரில் கொதிக்க வைக்கவும். இதிலிருந்து 2 தேக்கரண்டி அளவுக்கு குடிப்பதாலும், மேலே தடவுவதாலும் உடல் வலி சரியாகும். வாய் கொப்பளிப்பதால் பல் வலி குணமாகும்.
Source : Dinakaran

No comments:

Post a Comment