Tuesday, June 7, 2016

விதை விற்பனை: விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை அழைப்பு


தென்மேற்கு பருவமழை துவங்க உள்ளதால் விவசாயிகள் விதையை வாங்கிச் சென்று பயன்பெறுமாறு பல்லடம் வேளாண்மை துறை அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து பல்லடம் வேளாண்மை உதவி இயக்குநர் ராஜன் கூறியதாவது:
தென்மேற்கு பருவ மழை துவங்க இருப்பதால் பல்லடம் வட்டாரத்தில் தற்போது விவசாய சாகுபடிக்கு உகந்த சூழல் காணப்படுகிறது. அதற்கான முன்னேற்பாடுகளில் வேளாண்மைத் துறையினர் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். துவங்க உள்ள காரி பருவ சாகுபடிக்காக வேளாண்மை விரிவாக்க மையத்தில் தேசிய வளர்ச்சித் திட்டத்தில் உளுந்து வி.பி.என். 4, பாசிப்பயிறு கோ.ஜி.ஜி. 912 மற்றும் கொண்டைக்கடலை ஜேக்கி 9218, ஜே.ஜி. 11, விதைகள் கிலோ ரூ. 25 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கான விதைகள் போதிய அளவு இருப்பில் உள்ளன. மேலும், தென்னையைத் தாக்கும் கூண் வண்டை கட்டுப்படுத்த 50 சதவீத அரசு மானியத்துடன் இனக்கவர்ச்சி பொறி விலை ரூ. 1,250-க்கு வழங்கப்படுகிறது.
 மேலும், விவரங்களுக்கு பல்லடம் வேளாண்மை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றார்.

Source : Dinamani

No comments:

Post a Comment