Monday, August 1, 2016

சூரிய உலர்த்தி அமைக்க விவசாயிகளுக்கு மானியம் :

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தில், சூரிய உலர்த்தி அமைக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இதுகுறித்து, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் வேணுகோபால் வெளியிட்ட அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வேளாண்மை பொறியியல் துறை மூலம், தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தில், விவசாயிகள் சூரிய உலர்த்தி (சோலார் டிரையர்) அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், பாலிகார்ப்பனேட் சீட் மூலம் குடில் அமைத்து, அதற்குள் சூரிய ஒளி மூலம் பல்வேறு வகையான பழங்கள், காய்கறிகளை உலர செய்வதால் அவற்றை உபயோகப்படுத்தும் கால அளவு அதிகரிக்கிறது. சூரிய உலர்த்திகள் அமைக்க விரும்பும் விவசாயிகளின் நிலத்தில், 600 சதுர அடி பரப்பில், தட்டு மற்றும் டிராலி அமைக்கப்படுகிறது. மொத்தமாக, ஆறு லட்சம் ரூபாயில், 50 சதவீதம் மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள், தளி செயற்பொறியாளர் அலுவலகம், வேளாண்மை பொறியியல் துறை, 311, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் (மகளிர் காவல் நிலையம் அருகில்) கிருஷ்ணகிரி என்ற அலுவலகத்தையும், ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி தாலுகா விவசாயிகள், உதவி செயற்பொறியாளர் அலுவலகம், வேளாண்மை பொறியியல் துறை, ராயக்கோட்டை ரோடு, சென்னசத்திரம், ஓசூர் என்ற அலுவலகத்தையும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source : Dinamalar

No comments:

Post a Comment