Tuesday, August 9, 2016

காய்கனி வளர்ப்புக்கு மானியம்


தோட்டக்கலைத் தொழில்நுட்பமான பசுமைக் குடில் காய்கனி வளர்ப்புத் திட்டத்தின் கீழ், காய்கனி வளர்ப்புக்குப் பின்னேற்பு மானியம் வழங்கப்படும் என நாகை, தோட்டக்கலை துணை இயக்குநர் அ. அற்புதம் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறை மூலம் புதிய அறிமுகமாக தோட்டக்கலை தொழில்நுட்ப பசுமைக் குடில் காய்கனி வளர்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், பசுமைக் குடில் அமைக்க 50 சதவீத பின்னேற்பு மானியமாக,  அதிகபட்சம் சதுர மீட்டருக்கு ரூ. 468 வீதம் வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் 500 ச.மீட்டருக்கும், அதிகபட்சமாக 4 ஆயிரம் ச. மீட்டருக்கும் ஒரு நபர் மானியம் பெறலாம்.
மானியத் திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள், தொடர்புடைய வட்டார தோட்டக்கலைத் துறை அலுவலர்களை அணுகலாம் அல்லது மாவட்ட தோட்டக்கலை அலுவலகத்தை நேரில் அணுகலாம் என அவர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Source : Dinamani

No comments:

Post a Comment