நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், சின்ன வெங்காயத்தில் பூச்சி நோய் நிர்வாகம் குறித்த ஒருநாள் பயிற்சி, வரும் ஆகஸ்ட் 3ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து மாவட்ட வேளாண் அறிவியல் நிலைய இணைப் பேராசிரியர் அகிலா வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் சின்ன வெங்காயத்தில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் நிர்வாகம், அதன் வளர்ப்பு தொழில் நுட்பங்கள் குறித்த பயிற்சி ஆகஸ்ட் 3ம் தேதி (புதன்கிழமை) காலை 9 மணிக்கு நடக்கிறது. இப்பயிற்சியில் விதை நேர்த்தி, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, அறுவடைக்கு பின் விதை வெங்காயம் சேமிப்பு போன்றவை பற்றிய பயிற்சி அளிக்கப்படும்.
இதில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் என ஆர்வமுள்ள அனைவரும் பங்கேற்கலாம். பயிற்சியில் பங்கேற்க விரும்புபவர்கள், நாமக்கல் - மோகனூர் சாலையில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் வேளாண் அறிவியல் நிலையத்திற்கு நேரில் வந்து, வரும் ஆகஸ்ட்,2ம் தேதிக்குள் தங்களது பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Source : Dinakaran

No comments:
Post a Comment