வாடிப்பட்டி வேளாண் வட்டாரத்தில் உள்ள சோழவந்தான், நாச்சிகுளம் ஆகிய பகுதிகளில் உள்ள நெல் விற்பனை கிடங்குகளில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கிலோவுக்கு ரூ.10 மானியத்தில் நெல் விதை ரகங்களான சி.ஓ 51, ஏ.எஸ்.டி 16, என்.எல்.ஆர் 34449 ஆகிய விதை நெல் போதிய அளவில் இருப்பு உள்ளது. மேலும் திருந்திய நெல் சாகுபடி முறையில் இயந்திரம் மூலம் நடவு செய்யும் விவசாயிகளுக்கு ரூ.5000 மானியம் வழங்கப்படுகிறது. மண் வளத்தை பெருக்கும் நோக்கத்திற்காக தக்கைபூண்டு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 50 சதவீதம் ஏற்பு மானியம் வழங்கப்படுகிறது. சிறு குறு, பெண் மற்றும் ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கு ரூ.75 ஆயிரம் மானியத்தில் பவர் டில்லர் (சின்ன டிராக்டர்) வழங்கப்படுகிறது. தேசிய எண்ணெய் வித்து இயக்கத் திட்டத்தில் மானாவாரி நிலங்களில் எண்ணெய் வித்து மரப் பயிர்களான வேம்பு, இழுப்பை ஆகியவை சாகுபடிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டங்களை வாடிப்பட்டி வட்டார விவசாயிகள் பயன்படுத்தி பயன்பெறுமாறு வேளாண்மை உதவி இயக்குனர் முருகேசன் தெரிவித்தார்.
Source : Dinakaran
Source : Dinakaran
No comments:
Post a Comment