தோட்டக்கலைப் பயிர்களுக்கு மானியத் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் வேளாண் மையங்களில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து, விழுப்புரம் தோட்டக்கலைத் துணை இயக்குநர் மணிமொழி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை மூலம் நடப்பாண்டில் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளிகள், தேர்வு முகாம் செவ்வாய்க்கிழமை (ஆக.9) தொடங்கி, இரு தினங்கள் நடைபெறுகிறது. அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
பப்பாளி, கறிவேப்பிலை, பாக்கு மற்றும் வெற்றிலை போன்ற தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்வதற்கு மானியம் வழங்கப்படுகிறது. பந்தல் அமைப்புகள், கைத்தெளிப்பான்கள், விளக்குப்பொறி, இனக்கவர்ச்சிப் பொறி, மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி, தேனி வளர்ப்பு, நிழல் வலைக்குடில், மஞ்சள் நாற்றாங்கால் உள்ளிட்ட பல இனங்களுக்கு இத்திட்டத்தில் மானியம் வழங்கப்படுகிறது.
இது தொடர்பான விளக்கங்கள், இரு தினங்கள் நடைபெறும் முகாம்களில் அளிக்கப்படும். ஆர்வமுள்ள விவசாயிகள் பங்கேற்று, விண்ணப்பிக்குமாறு அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Source : Dinamani

No comments:
Post a Comment