t
'உழைப்புக்கு ஓய்வு இல்லையே' என மண்வெட்டியை கையில் பிடித்து மூன்று ஆண்டுகள் உருண்டோடி விட்டன. துவக்கத்தில் பாலிதீன் பைகளில் மண் நிரப்பி பூச்செடிகளை வளர்த்தார்.
செடிகளுக்கு உரமிட்டு, தண்ணீர் ஊற்றி பக்குவமாக வளர்த்ததால் பூக்கள் பூத்து குலுங்கின. படிப்படியாக பூச்செடிகளுடன், மரக்கன்றுகளையும் வளர்த்தார். உழைப்பை மூலதனமாக கொண்டு படிப்படியாக முன்னேறி நர்சரி கார்டன் அமைத்தார்.
மூன்று ஆண்டுகளில் பிரபலமடைந்தார். இவரது நர்சரியில் 27 நட்சத்திர மரங்கள், 500-க்கும் மேற்பட்ட மரக்கன்று வகைகள், 300-க்கும் மேற்பட்ட செடி வகைகள் அணி வகுத்து நிற்கின்றன.
அவர் கூறியது: மரங்கள் வளர்க்க ஆர்வமாக இருந்தாலும் தரமான கன்று கிடைப்பதில் தட்டுப்பாடு உள்ளது. அதை தவிர்க்க பொழுது போக்காக இந்த தொழிலை ஆரம்பித்தேன். இயற்கை விவசாய முறையில் நர்சரி பண்ணை வைத்துள்ளேன். அரிய வகை மூலிகை, மரம், செடி, கொடி வகைகளை வளர்க்கிறேன். செடியாக மட்டுமன்றி உடனே பலன் தரும் வகையில் மரங்களையும் பேக்கிங் முறையில் நடவு செய்து தருகிறேன். ஆன்லைன் பதிவு மூலம் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வருகிறேன். விவசாயிகளுக்கு குறைந்த விலையில் தரமான கன்றுகளை தர வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம், என்றார்.
தொடர்புக்கு 98430 80275.
- டி.செந்தில்குமார், காரைக்குடி
.
Source : Dinamalar
No comments:
Post a Comment