Tuesday, August 16, 2016

வேளாண் அறிவியல் நிலையத்தில் நாளை சிறுதானியங்கள் மதிப்பு கூட்டுதல் பயிற்சி

சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், நாளை (17 ம் தேதி) சிறு தானியங்களில் இருந்து பல்வேறு வகை உணவுகள் பொருட்கள் தயாரிக்கும் ஒரு நாள் பயிற்சி நடக்கிறது.

இது குறித்து, திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம் வெளியிட்ட அறிக்கை: சிறுதானியங்களில், அதிக வைட்டமின், தாது உப்புகள், உடலுக்கு தேவையான கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. சிறுதானியங்களை பயன்படுத்தி, பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் தயாரிக்கும் ஒரு நாள் பயிற்சி, நாளை சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையத்தில் நடக்கிறது. பயிற்சி கட்டணமாக, 300 ரூபாய் செலுத்த வேண்டும். ஆண், பெண் விவசாயிகள், சுய உதவி குழு மகளிர், தொழில் முனைவோர் கலந்து கொள்ளலாம். பயிற்சி கையேடு, மதிய உணவு வழங்கப்படும். இதில் கலந்து கொள்ள விரும்புவோர், தங்கள் பெயரை, 0427-2422550 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, முன் பதிவு செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Source : Dinamalar

No comments:

Post a Comment