Friday, August 5, 2016

வேளாண் நிலையத்தில் முயல் வளர்ப்பு பயிற்சி : அதிகாரி தகவல்

நாமக்கல் மோகனூர் சாலையில் கால்நடை  மருத்துவக்கல்லூரி வளாகத்தில்  அமைந்துள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 10ம் தேதி ‘முயல் வளர்ப்பு’  என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி நடைபெற உள்ளது. மாவட்ட வேளாண் அறிவியல் நிலைய  இணைப் பேராசிரியர் மற்றும் தலைவருமான அகிலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:

நாமக்கல்  மோகனூர் சாலையில் கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள வேளாண்  அறிவியல் நிலையத்தில், வரும் 10ம் தேதி (புதன்கிழமை) காலை 9 மணிக்கு‘முயல் வளர்ப்பு’ என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது.  இப்பயிற்சியில் முயல் வளர்ப்பின் பயன்கள், முயல் இனங்கள், முயல்களை  தேர்ந்தெடுத்தல், இனப்பெருக்க முறைகள், தகவல் மேலாண்மை, நோய்களும், நோய்  தடுப்பு முறைகளும் மற்றும் இறைச்சி முயல் வளர்ப்பு பொருளாதாரம் குறித்து  பயிற்சி அளிக்கப்படும்.

இதில், அனைத்து விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக  மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ள அனைவரும் பங்கேற்கலாம். பயிற்சியில்  பங்கேற்க விரும்புவோர் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 9ம் தேதிக்குள்  (செவ்வாய்க்கிழமை) தங்களது பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Source : Dinakaran

1 comment:

  1. என்னிடம் தாய் முயலுக்கான கூண்டுகள் விற்பனைக்கு உள்ளது தேவை உள்ளவர்கள் அனுகவும் . 9659331953

    ReplyDelete