Wednesday, August 3, 2016

பசுந்தாள் உர விதைகள் மானியத்தில் வழங்கல்


'பசுந்தாள் உர விதைகளை மானிய விலையில் பெற வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம்' என, நாமகிரிப்பேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அசோகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில், 2016 - 17ம் ஆண்டில், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், மண் வளத்தினை மேம்படுத்தும் பொருட்டு, நெல் வயல்களில் நடவுக்கு முன் பசுந்தாள் உர விதைகளை விதைக்க வேண்டும். இந்த முறையில் நெல் பயிரிட்டால், நெல்லுக்கு தழைச்சத்து கிடைப்பதோடு நோய் எதிர்ப்புத்திறனும் அதிகரிக்கும். மானிய விலையில் விதை தேவைப்படும் விவசாயிகள், நாமகிரிப்பேட்டை வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள முன்னுரிமை பதிவேட்டில் விவசாயிகளின் சிட்டா, ரேஷன் கார்டு நகல்களுடன் வந்து பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Source : Dinamalar

No comments:

Post a Comment