''திருந்திய நெல் சாகுபடி எனப்படும் ஒற்றை நாற்று நடவு முறையானது, நெல் சாகுபடியில், 30 சதவீத கூடுதல் மகசூலை வழங்குகிறது,'' என, டி.என்.பாளையம் வேளாண் உதவி இயக்குனர் சிதம்பரம் தெரிவித்தார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது: இந்த முறையில், ஏக்கருக்கு, இரண்டு கிலோ விதை நெல் போதுமானது. ஒரு ஏக்கருக்கு ஒரு சென்ட் மேட்டுப்பாத்தி நாற்றங்கால் அமைக்க வேண்டும். இந்த சாகுபடி முறையால், 40 முதல், 50 சதவீதம் வரை, நீரை சேமிக்கலாம். பூச்சி மற்றும் நோய் தாக்குதலும் குறையும். போதுமான இடைவெளி இருப்பதால், எலிகளால் ஏற்படும் சேதம் தவிர்க்கப்படும். விதை, இடுபொருட்களின் செலவு மற்றும் அளவும் குறைகிறது. உற்பத்தி செலவு குறைவதுடன், மகசூல் அதிகரிப்பதால், கூடுதல் வருவாய் கிடைக்கும். அனைத்து பருவங்களுக்கும், அனைத்து நெல் ரகங்களுக்கும் இம்முறை ஏற்றதாகும். இவ்வாண்டில், டி.என்.பாளையம் வட்டாரத்துக்கு இயந்திர நடவுக்காக, 230 ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு ஹெக்டேருக்கு, 5,000 ரூபாய் மானியம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Source : Dinamalar
No comments:
Post a Comment