சிங்கம்புணரி அருகே எஸ். புதூர் ஒன்றியத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு தோட்டக்கலை திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் பெறும் முகாம் நாளை (ஆக.3) நடக்கிறது.இதையொட்டி எஸ்.புதூர் ஒன்றிய அலுவலகத்தில் காலை 10மணி முதல் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. சிங்கம்புணரியில் ஆக.4ம் தேதி சிங்கம்புணரி ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. இதில் தேசிய தோட்டகலை இயக்கத்திட்டத்தின் கீழ் வீரிய இரக காய்கறி நாற்றுகள், பழமரங்கள், பசுமை குடில்கள், நிழல்வலைள் கூடம் அமைக்கவும், விளக்குபொறி, இனக்கவர்ச்சி பொறி, நிலையான பந்தல், சொட்டுநீர் பாசனம் அமைக்க 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. பயன்பெற விரும்பும் விவசாயிகள் குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, சிட்டா நகலுடன் விண்ணப்பங்கள் அளிக்கலாம். மேலும் ஆடி பட்ட விதைகளும் கிடைக்கும் என. இத்தகவலை புதூர், சிங்கம்புணரி தோட்டகலை துறை உதவி இயக்குநர்கள் ரேகா, அழகுமலை தெரிவித்துள்ளனர்.
Source : Dinakaran
Source : Dinakaran
No comments:
Post a Comment