சிறுதானியங்களை பயிரிடுவதற்கு முன்னதாக விதை நேர்த்தி செய்து விதைப்பு மேற்கொள்ள வேளாண் விரிவாக்க மைய உதவி இயக்குநர் அசோகன், வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் சரவணன் ஆகியோர் வலியுறுத்தினர்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மானாவரி சிறுதானியங்களில் விதை மூலம் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த, ஒரு கிலோ விதைக்கு ட்ரைகோடெர்மா 4 கிராம் அல்லது மான்கோசெப் 4 கிராம் அல்லது கார்பன்டாசிம் 2 கிராம் அல்லது சூடோமோனஸ் ப்ளோரோசன்ஸ் 10 கிராம் எடுத்து நன்றாக கலந்து 24 மணி நேரம் வைத்திருந்து பிறகு விதைப்பு செய்ய வேண்டும்.
இதேபோல, உயிர் உரமான ஒரு பொட்டலம் அசோஸ்பைரில்லம் மற்றும் ஒரு பொட்டலம் பாஸ்போ பாக்டீரியா நுண்ணுயிர் கலவையை 400 மில்லி ஆறிய கஞ்சியுடன் கலந்து, இக்கலவையுடன் ஒரு ஏக்கருக்கு தேவையான விதைகளை கலந்து நிழலில் உலர்த்தி 24 மணி நேரத்துக்குள் விதைக்க வேண்டும்.
பூஞ்ஞான விதை நேர்த்தி செய்தபின் 24 மணி நேர இடைவெளிக்குப் பின்னர் உயிர் உர விதை நேர்த்தி செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : Dinamani
No comments:
Post a Comment