நலம் தரும் நாட்டு மருத்துவத்தில், கை, கால் மூட்டுகளில் ஏற்படும் வலிக்கு தீர்வுகாண்பது குறித்து பார்க்கலாம். மூட்டுகளில் வலி இருந்தால் கட்டை விரலை மடக்க முடியாத நிலை, சிவந்த நிலை, வீக்கம் காணப்படும். கால் கட்டை விரலில் வலி, வீக்கம் இருக்கும். வெந்தயத்தை கொண்டு மூட்டு வலிக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வெந்தயம், மஞ்சள் பொடி, இஞ்சி. வெந்தயத்தை நீர்விட்டு ஊறவைத்து அரைத்து எடுக்கவும். இதனுடன் சிறிது மஞ்சள் பொடி, இஞ்சி சாறு சேர்க்கவும். லேசாக சூடு பண்ணவும்.
இது வெந்தவுடன் எடுத்து ஆறவைத்து முட்டி, கட்டை விரலில் வைத்து கட்டி வைத்தால் மூட்டு வலி, வீக்கம் குணமாகும். கழற்சிக்காயை கொன்டு இதற்கான மருந்து தயாரிக்கலாம். கழற்சிக்காயை வெயிலில் காயவைத்து உள்ளே இருக்கும் பருப்பை எடுக்கவும். பருப்பை காயவைத்து அரைத்து பொடியாக்கவும். இந்த பொடியுடன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து வலி, வீக்கம் இருக்கும் இடத்தில் இதை மேல்பூச்சாக போடும்போது வலி, வீக்கம் குணமாகும். வீக்கத்தை வற்றச்செய்யும் தன்மை கழற்சிகாய்க்கு உண்டு.
மூட்டுவலி உள்ளவர்கள் அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். உணவில் உப்பு குறைவாக சேர்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். தனியாவை கொண்டு மூட்டுவலிக்கான தேனீர் தயாரிக்கலாம். தனியா, உலர்ந்த திராட்சையை பசையாக அரைத்து ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதை தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். வடிக்கட்டி காலை, மாலை வேளைகளில் குடிக்கலாம். இது சிறுநீர் பெருக்கியாக விளங்குகிறது. யூரிக் அமிலம் வெளியேறுவதால் மூட்டுவலி, வீக்கம் குணமாகும்.

Source : Dinakaran
No comments:
Post a Comment