t
வெங்காய பயிரில் இலைப்பேன் தாக்குதல் உள்ளதா என விவசாயிகள் கண்காணிக்க வேண்டும். பயிரின் இளம் பருவத்தில் நிலவும் வெப்பமான கால நிலையினால், வெங்காய பயிரில் இலைப்பேன் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது.
இலைப்பேன் தாக்குதலால் வெங்காய பயிரில் இலை முழுவதும் வெண் திட்டுக்கள் காணப்படும். கடுமையாக தாக்கப்பட்ட இலைகள் நுனியில் இருந்து காயத் தொடங்கும். இலைகள் பசுமை நிறம் குன்றி வெண்மை நிறமடைவதால் ஒளிச்சேர்க்கை பாதிக்கப்பட்டு பயிர் வளர்ச்சி குன்றும்.
இலைகளை ஒரு வெண்ணிற அட்டையின் மீது தட்டினால் சிறிய மெலிந்த வெளிர் மஞ்சள் மற்றும் சாம்பல் நிற இலைப்பேன்கள் நகர்வதை எளிதில் கண்டு கொள்ளலாம். இளங்குருத்துகளில் முட்டை இடும்.
வெங்காய பயிரில் இலைப்பேன் தாக்குதல் தீவிரமடைந்து காணப்பட்டால் 'டைமீதோபேட்' மருந்து எனில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு மில்லி வீதமும், 'புரோபினோபாஸ்' மருந்து எனில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரண்டு மில்லி வீதமும் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு தெளித்து கட்டுப்படுத்தலாம். மருந்து கரைசல் இலைகளில் நன்கு படும்படி தெளிக்க வேண்டும்.
மருந்து கரைசல் பயிரில் நன்கு படிவதற்காக 'சாண்டோவிட்' 'இண்ட்ரான்' 'பைட்டோவிட்' 'அக்ரோவிட்' போன்ற திரவ சோப்புகளில் ஏதேனும் ஒன்றினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு கால் மில்லி வீதம் சேர்த்து கலக்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யும் போது நோய் தாக்குதலில் இருந்து வெங்காய பயிர்களை காக்க முடியும்.
Source : Dinamalar
No comments:
Post a Comment