தமிழகத்தில் திருந்திய நெல் சாகுபடி முறையை பின்பற்றுவதால் விவசாயிகளுக்கு பலவித நன்மைகள், செலவினம் குறைகிறது என்பதை அனுபவப்பூர்வமாக உணரப்பட்டுள்ளது.
திருந்திய நெல் சாகுபடி ஏன், விவசாயிகளுக்கு ஏற்படும் பலன்கள் என்ன என்பது குறித்து மதுரை வேளாண் துறையின் இணை இயக்குனர் கனகராஜ் கூறியதாவது: குறைந்த சாகுபடி செலவு. ஏக்கருக்கு 2 - 3 கிலோ விதை போதுமானது. ஏக்கருக்கு 1 சென்ட் நாற்றங்கால் மற்றும் குத்துக்கு ஒரு நாற்று போதும். ஒரு சதுர மீட்டருக்கு 16 குத்துக்கள் போதுமானது. களைகளை கட்டுப்படுத்த களைக்கருவி உபயோகிப்பதால் மனித ஆற்றல் செலவு இல்லை. வயலில் நீரை தேக்கி வைக்க வேண்டிய அவசியமில்லை. இதனால் தண்ணீர் செலவு இல்லை.
பாசன நீர் தேவை 40 -50 சதவிகிதம் குறைவு. நீர்ப்பாசனத்திற்கான மின்சாரம் செலவு குறைவு. அதிக வேர் வளர்ச்சி. அதிக வெள்ளை நிற பணியாற்றும் வேர்கள். அதிக ஊட்டச்சத்து உபயோகத்திறன். அதிக துார்கள், அதிக கதிர்கள், அதிக மணிகள் கிடைக்கும். பயிருக்கு சாயாத தன்மை அதிகமாகிறது. அதிக தானிய, வைக்கோல் மகசூல், அதிக லாபம் கிடைப்பதால் திருந்திய நெல் சாகுபடி விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என்றார்.
Source : Dinamalar
No comments:
Post a Comment