Tuesday, October 6, 2015

ராமநாதபுரம் மீனவ பெண்ணுக்கு அமெரிக்க விருது; நாளை வழங்கப்படுகிறது



சென்னை, 

தேசிய மீனவர் பேரவை தலைவர் எம்.இளங்கோ நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ராமநாதபுரம் அருகே உள்ள சின்னபாலம் கிராமத்தை சேர்ந்த 45 வயது பெண் லட்சுமி. இவர் அப்பகுதியில் உள்ள மன்னார் வளைகுடா தேசிய கடல் பூங்கா அருகில் கடல்பாசி அறுவடை செய்யும் தொழில் செய்பவர். 

கடல்பாசி தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள் உள்ளிட்ட மீனவ பெண் தொழிலாளர்களின் அமைப்பான ராமநாதபுரம் மீன்பிடி தொழிலாளர் யூனியன் நிர்வாகியாக உள்ள லட்சுமி, மீனவ பெண் தொழிலாளர்களுக்காக போராடி வருபவர். இவருக்கு அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தில் நாளை(வியாழக்கிழமை) நடக்கும் விழாவில் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான 2015-ம் ஆண்டின்சிறந்த மகளிர் தலைவிவிருது வழங்கப்பட இருக்கிறது. 

சாதாரண மீனவ சமுதாய கிராம பெண்ணான லட்சுமி, கடல் மற்றும் கடற்கரை சூழலை பாதுகாக்க தொடர் நடவடிக்கை எடுத்ததற்காக இந்த சர்வதேச விருது வழங்கப்படுகிறது. விருது பெற செல்லும் லட்சுமிக்கு சென்னை விமான நிலையத்தில் நேற்று வழியனுப்பு விழா நடந்தது. 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

http://www.dailythanthi.com/News/State/2015/10/07043713/Fishing-woman-belongs-from-Ramanathapuram-to-be-honoured.vpf

No comments:

Post a Comment