ராமநாதபுரம்;வறட்சியை தாங்கி வளரும்
திரூர் குப்பம் (டி.கே.எம்.,13) என்ற புதியரக நெல்லை ராமநாதபுரம் வேளாண் அறிவியல் மையம்
அறிமுகப் படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 1.20 லட்சம்
எக்டேரில் நெல் சாகுபடி யாகிறது. வறட்சி, உவர் மண் போன்ற காரணங்களால் மகசூல் குறைகிறது.
இதனால் விவசாயிகள் பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றனர். மோட்டா ரக நெல் வறட்சியை
தாங்கி வளரும். ஆனால் சன்னரக நெல்லிற்கே நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மோட்டா ரகத்தை
சாகுபடி செய்வ தில்லை. சன்னரக நெற் பயிர்கள் வறட்சியால் அதிகளவில் பாதிக்கப்படு கின்றன.
இதை தடுக்கும் வகையில் ராமநாதபுரம் வேளாண் அறிவியல் மையம் நன்கு வறட்சியை தாங்கி வளரும்
சன்னரகத்தைச் சேர்ந்த "திரூர்குப்பம்' என்ற புதிய ரகத்தை அறிமுகப்படுத்தி யுள்ளது.
இதுகுறித்து அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர்
சீகன்பால், உதவி பேராசிரியர் அருள்மொழி கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் சாகுபடி
செய்யப்படும் நெல், பால் பிடிக்கும் பருவத்தில் நீரின்றி பாதிக்கப்படுகிறது. திரூர்குப்பம்
நெல் நீண்டநாட்களுக்கு வறட்சியை தாங்கும். மானவாரியாக 120 நாட்களில் அறுவடைக்கு வரும்.
உவர் மண்ணிலும் வளரும். நல்ல மகசூல் கிடைக்கிறது. சன்னரகத்தை பொறுத்த வரை ஆயிரம் நெல்
மணிகள் 16 கிராமிற்குள் இருக்க வேண்டும். திரூர்குப்பம் 13.5 கிராம் மட்டுமே உள்ளது.
இதனால் நல்ல விலை கிடைக்கும், என்றார்.
No comments:
Post a Comment