பெரம்பலூர்,
கம்பு விதை முளைக்காததால், அதனை விற்பனை செய்த கடைஉரிமையாளர், விவசாயிக்கு ரூ.10ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கம்பு விதை
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை சேர்ந்தவர் அந்தோணிசாமி (வயது 65). இவர் அரியலூரில் சின்னக்கடைதெருவில் அக்ரோ ஏஜென்சி நடத்தி வரும் சிவசண்முகம் என்பவரது கடையில் கடந்த 23.6.2010 அன்று ரூ.1,600 செலுத்தி, 4½ கிலோ கம்பு விதை வாங்கினார்.
வயலில் விதைத்த கம்புகள் பலநாட்களாகியும் சரிவர முளைக்கவில்லை. இதனால் பொருள் இழப்பு ஏற்பட்டதால், மனஉளைச்சலுக்கு ஆளான அந்தோணிசாமி பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மூலம் புகார் மனு தாக்கல் செய்து வழக்கு தொடர்ந்தார்.
இழப்பீடு
இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் மன்ற தலைவர் கலியமூர்த்தி, உறுப்பினர்கள் அன்பழகன், ஜெயலட்சுமி ஆகியோர் கொண்ட குழுவினர், மனஉளைச்சலுக்கு ஆளான அந்தோணிசாமிக்கு ரூ.10ஆயிரம் இழப்பீடு தொகையும், வழக்கு செலவிற்காக ரூ.3ஆயிரமும் மற்றும் கம்பு விதை வாங்கிய வகையில் அந்தோணிசாமி செலுத்திய ரூ.1600–ஐயும் 2 மாதத்திற்குள் சிவசண்முகம் வழங்கவேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

http://www.dailythanthi.com/News/Districts/Perambalur/2015/10/31002155/Rs-10-lakh-compensation-to-the-farmer-rye-seed-mulaikkatat.vpf
No comments:
Post a Comment